திருமதி விக்டோரியா தியோகராஜனுக்கு தமிழ் சமூகத்தின் பெருமை விருது

திருமதி விக்டோரியா தியோகராஜனின் மரபை கௌரவிக்கும்
வகையில் ஒரு விருதை நிறுவுதல்

குறிஞ்சி முத்தமிழ்ச் சங்கம் திரு. சிசில் சுந்தரின் மனைவி திருமதி விக்டோரியா தியோகராஜனின் அவர்களின் வாழ்வைக் கௌரவிக்கும் வகையில் ஒரு விருதைக் குறிஞ்சி முத்தமிழ்ச் சங்கம் நிறுவியுள்ளது . திரு. சிசில் சுந்தர் அவர்களின் மனைவியார் திருமதி. விக்டோரியா தியோகராஜன் அவர்கள் டிசம்பர் 2022 இல் புற்றுநோய் காரணமாக நம்மை விட்டுப் பிரிந்தார் . திருமதி விகடோரியா தியோகராஜன் அவர்கள் தமது இரக்கம் , அசைக்க முடியாத அன்பு ,மற்றும் தம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் முன்மாதிரியாக அறியப்பட்ட நேசத்துக்குரிய ஒரு நபர் . நமது சமூகத்திற்குள்ளும் அதற்கு அப்பாலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான அவர்களதுஆழ்ந்த நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் பாராட்டுதலுக்கு உரியவை . கொலராடோவில் உள்ள தமிழ்ச் சமூகத்தில் அவர்களது பங்களிப்புகளுக்குப் பரவலான மரியாதையைப் பெற்றார் . நம்முடன் வாழ்ந்து மறைந்த திருமதி. விக்டோரியா தியோகராஜன் அவர்களது வாழ்வைக் கௌரவிக்கும் வகையில், குறிஞ்சி முத்தமிழ்ச் சங்கம், அவரைப் போல் சமூகத்திற்குச் சேவையாற்றும் கொலராடோவைச் சேர்ந்த அன்பர்களைக்கௌரவிக்க இந்த விருதை நிறுவியுள்ளது .